வேடசந்தூரில் கஞ்சா விற்பனை செய்த கணவன் - மனைவி கைது

1059பார்த்தது
வேடசந்தூரில் கஞ்சா விற்பனை செய்த கணவன் - மனைவி கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இளையராஜா (40) மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி (30) ஆகிய இருவரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். கொல்லம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த தம்பதியினரை மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி