கோவிலுக்கு சீர்வரிசைத்தட்டுகளுடன் வந்த இஸ்லாமியர்கள்

3பார்த்தது
கோவிலுக்கு சீர்வரிசைத்தட்டுகளுடன் வந்த இஸ்லாமியர்கள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை ஜமீன் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, இஸ்லாமிய ஜமாத்தார்கள் வாத்தியங்கள் முழங்க, தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர். பழங்கள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருட்களை தாம்பூலத் தட்டில் ஏந்தி வந்த இஸ்லாமியர்கள், விழா குழுவினரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இன்றைய சூழலில் மதங்களின் பெயரால் பல கலவரங்கள் நடக்கும் நிலையில், தொப்புள் கொடி உறவுகளாக வாழ்ந்து இடையகோட்டை மக்கள் வியக்க வைக்கிறார்கள்.