திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சி கீழ் மாத்தினிபட்டியில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் நீர்வழிப் பாதையை விட ஆழமாக இருப்பதால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி ஏற்பட்டு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதனால், கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை மீட்டனர்.