திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 4வது நாளாக இன்று போராட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதியான 313-ஐ நிறைவேற்ற வலியுறுத்தியும், காலமுறை ஊதியம் வழங்கக்கோரியும் கண் மற்றும் வாயில் கருப்பு துணியை கட்டி கும்மி அடித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.