திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

0பார்த்தது
திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 420 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.