திண்டுக்கல்: ஊரை காலி செய்யப்போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை

1326பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட ஓடைப்பட்டியில் சுமார் 300 குடும்பங்கள் கழிவுநீர் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் காய்ச்சல், இருமல், தோல் நோய்கள் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வரத்து வாய்க்காலை அடைத்தாலும் மர்ம நபர்கள் உடைத்துவிடுவதால் பிரச்சனை தொடர்கிறது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊரை காலி செய்யப்போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி