திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமிழ்வாணன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள ஆடு, மாடு, கோழிப் பண்ணைக்குள் புகுந்த தெரு நாய்கள், அங்கிருந்த 3 ஆடுகளைக் கடித்துக் கொன்றுள்ளன. மேலும் 6 ஆடுகள் படுகாயமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து கால்நடை மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.