அய்யலூர் அருகே வினோத வழிபாடு!

0பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் தீத்தாகிழவனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று, பாரம்பரிய 'சேத்தாண்டி வேடம்' நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் சேறு மற்றும் கரி பூசிக்கொண்டு சடங்குகளில் ஈடுபட்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர், அவர்கள் கோவில் குளத்தில் நீராடி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.