வேடசந்துாரைச் சேர்ந்த வைஷ்ணவி, தன் தாய் மாமனை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு ஓடிய வைஷ்ணவி, சூர்யாவுடன் திருப்பூர் சென்று குடும்பம் நடத்தினார். புகார் அளிக்கப்பட்டதை அடுத்து வேடசந்தூர் போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி நடத்திய விசாரணையில், இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் செல்வதாக கூறியதால், அவரை சூர்யாவுடன் அனுப்பி வைத்தனர். திருமணமான இருவருக்கும் தலா இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களை சேர்த்து வாழ அனுமதித்ததால் நான்கு குழந்தைகளும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளனர். குடும்பப் பிரச்சனைகளில் முடிவெடுப்பது குறித்து போலீசாருக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.