திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே எஸ். புதுப்பட்டி, மாமரத்துப்பட்டி, சரலாம்பட்டி, அயினாம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர், வீடு கட்டுபவர்களிடம் பணம் பறிப்பதாகவும், வீட்டுப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜா என்பவர் வீடு கட்டியபோது, அவர் மீது புகார் அளித்துவிட்டு, வீட்டுப் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற நாகேந்திரனை பொதுமக்கள் பிடித்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். FIR பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த நாகேந்திரன், தலித் அமைப்பினரைத் தூண்டிவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே, நாகேந்திரன் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.