திண்டுக்கல்: காகங்கள் செத்து விழுவதால் கிராம மக்கள் அதிர்ச்சி

1281பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியத்தின் மல்வார் பட்டி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக மரங்களில் தங்கியிருந்த காக்கை உள்ளிட்ட பறவைகள் திடீரென இறந்து விழுந்துள்ளன. தொடர்ந்து பறவைகள் உயிரிழப்பதால், அப்பகுதி மக்கள் பறவைக்காய்ச்சல் பரவி இருக்குமோ என அச்சமடைந்துள்ளனர். இது குறித்து அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை, இப்பகுதிக்கு வந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி