வேடசந்தூர் அருகே சுள்ளெறும்பு, முருநெல்லிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பூபதிராஜா(24) என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம், சார்பு ஆய்வாளர் ஜெயலட்சுமி, பூபதி ராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.