பிரபல இயக்குநர் அட்லீ - ப்ரியா தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்தது. தற்போது இருவரும் தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளனர். அதன்படி அந்த குழந்தைக்கு ‘Miyou’ என பெயர் வைத்துள்ளார் அட்லீ. அந்தப் பெயருக்கு ‘அழகு, மென்மை, அன்பு’ என்பது அர்த்தமாம். இந்த தம்பதிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அட்லீயை பொறுத்தவரை அவர் தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.