இயக்குநர் வி.சேகர் மரணம்.. நாளை இறுதிச்சடங்கு

119பார்த்தது
இயக்குநர் வி.சேகர் மரணம்.. நாளை இறுதிச்சடங்கு
'வரவு எட்டணா செலவு பத்தணா', 'காலம் மாறிப்போச்சு' போன்ற குடும்பப் படங்களை இயக்கிய வி.சேகர் நேற்று (நவ., 14) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நாளை (நவ., 16) அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை நெய்வானத்தம் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி