உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், போலிப் பட்டதாரிகளை விமர்சித்துக் கூறிய 'கரப்பான்பூச்சி' என்ற வார்த்தையை முன்வைத்து, அபிஜீத் தீப்கே 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற நையாண்டியான கட்சியை மே 16-ல் தொடங்கினார். வேலையின்மையால் கொந்தளிப்பில் இருந்த இளைஞர்கள் மத்தியில் இக்கட்சி வைரலானது. இதன் எக்ஸ் பக்கம் 1.65 லட்சம் பாலோயர்களுடன் முடக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராமில் பாஜகவை விட அதிகமாக 12.6 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளது.