மும்பையில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவும், அவரது தந்தை சதீஷ் சாலியனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திஷா சாலியன், 2020-ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி மும்பையின் மலாட் பகுதியில் உள்ள கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.