2 வாரங்களாக நீடித்த டிஸ்னி, யூடியூப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. அக்., 30ஆம் தேதி, டிஸ்னி மற்றும் யூடியூப் டிவி தரப்பில் புதிய உரிம ஒப்பந்தம் எட்டப்படாததால், ESPN மற்றும் ABC போன்ற டிஸ்னியின் சேனல்கள் யூடியூப் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை. இந்நிலையில், நேற்று (நவ., 14) இரு தரப்பினரும் புதிய ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம், ESPN மற்றும் ABC உட்பட டிஸ்னியின் அனைத்து நெட்வொர்க்குகளும் யூடியூப் டிவி சந்தாதாரர்களுக்கு மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது.