தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை (பிப்.06) முதல் பிப்.12 வரை விருப்ப மனுக்கள் பெறலாம் என கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும், பொதுத் தொகுதிக்கு ரூ.15,000 மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.10,000 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தேமுதிக்க இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை வெளிப்படுத்தாதது குறிப்பிடத்தக்கது.