அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாததால் நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்கியுள்ளன. கோவையில் கொலை வழக்கு ஒன்றில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், அரசின் தவறால் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.