நெல்லை மாவட்டத்தில் திமுக தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரது பதவியும் பறிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் இன்று (நவ., 06) ஒன் டூ ஒன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது உட்கட்சி பிரச்சனைகளை ஓரங்கட்டி வைக்க நிர்வாகிகளை எச்சரித்தார். 2026 தேர்தலில் நெல்லையில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றும் தோற்றால் பதவி நிச்சயம் பறிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.