வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவ.20) இரவு 10 மணிவரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.