தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மே.16) கடலூர் வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.