இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

4192பார்த்தது
இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மே.16) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இரவு மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி