'திராவிட வெற்றிக் கழகம்' என்ற பெயரில் இன்று (நவ., 20) புதிய கட்சியை தொடங்கியுள்ள மல்லை சத்யா, திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதிமுகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சத்யா, வைகோ, துரை வைகோவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக, புதுக்கட்சி தொடங்கி திமுக கூட்டணியில் சேரப்போவதாக ஏற்கனவே சத்யா தெரிவித்திருந்தார். வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.