ஹெலெனிக் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று (நவ.10) நடந்த ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இது ஜோகோவிச் வென்றுள்ள 101-வது பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.