மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததை கண்டித்தும் தேமுதிக சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையிலும் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் இந்த
ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.