அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக நிர்வாகிகள் நேற்று (டிச., 25) நேரில் சந்தித்து பேசினர். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் நினைவு நாள் (டிச., 28) நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் இபிஎஸ் இடம் வழங்கினர். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொங்கலுக்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.