தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக இதுவரை கூட்டணியை அறிவிக்கவில்லை. திமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை ஏறத்தாழ சுமூகமாக முடிந்திருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீர் டிவிஸ்ட்டாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், 10+ சீட்டுகள் ஒதுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.