நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை தேமுதிக இன்னும் இறுதி செய்யாத நிலையில், விருப்ப மனு விநியோகத்தை சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இன்றுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதன்படி பிப்.15ஆம் தேதி 5 மாலை மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொண்டு திருப்பி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.