தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நவ. 4 முதல் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பணியை தேர்தல் ஆணையம் உடனே கைவிட விலயுறுத்தி எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நவம்பர் 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.