திமுக கூட்டணி 10 கட்சி அல்ல.. 10 ஆண்டு கால கூட்டணி

88பார்த்தது
திமுக கூட்டணி 10 கட்சி அல்ல.. 10 ஆண்டு கால கூட்டணி
திருச்சி தில்லையம்மன் படித்துறையில் காவிரியில் மீன் வளத்தை பெருக்கிட, மீன் குஞ்சுகளை ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசினார். அப்போது "திமுக கூட்டணி 10 கட்சிகளின் கூட்டணி அல்ல, வலிமையான 10 ஆண்டுகால கூட்டணி” என கூறினார். திமுக கூட்டணியை காய்கறியுடன் ஒப்பிட்ட அண்ணாமலையின் கருத்துக்கு பதிலளித்த அவர், கூட்டணி நிலை உறுதியானது என்பதை வலியுறுத்தினார்.