திமுக கூட்டணி கட்சி எம்.பி.யான சு.வெங்கடேசன், பனையூரில் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை எனவும், சினிமா தொடர்பான சந்திப்பு என்று விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இயக்குநர் ஷங்கர் 'வேள்பாரி' நாவலை 3 பாகங்களாக படமாக்க உள்ள நிலையில், அதன் ஒரு பாகத்தில் விஜய் நடிப்பது குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.