மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிப்.12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டில் நிலவும் பாரபட்சத்தை தட்டிக்கேட்கும் நோக்கில், மாநிலம் தழுவிய அளவில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.