திமுக கூட்டணியே வெல்லும்: வேல்முருகன் திட்டவட்டம்

37பார்த்தது
திமுக கூட்டணியே வெல்லும்: வேல்முருகன் திட்டவட்டம்
வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கரூரில் இன்று (ஜன., 10) செய்தியாளர்களிடம் பேசியபோது, 'எங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு உரிய அங்கீகாரத்தை முதல்வர், தேர்தலில் எங்களுக்கு தருவார் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார். கடந்த 2021 தேர்தலில் தவாகவுக்கு 1 தொகுதி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 2026 தேர்தலில் அதிக சீட் கேட்க தவாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி