பாஜக எஸ்.ஜி.சூர்யா மீது திமுக தாக்கு.. ஹெச்.ராஜா காட்டம்

7பார்த்தது
தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடந்த மக்கள் சபை விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில இளைஞரணித் தலைவர் எஸ்.ஜி.சூர்யா மீது திமுகவினர் கடும் தாக்குதலை நடத்தினர். இதற்கு எதிராக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “திமுக அரசின் கீழ்த்தரமான அரசியல் மட்டுமல்ல, அப்பட்டமான அதிகார அத்துமீறல். பாஜக இளைஞரணித் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய திமுகவை சேர்ந்த குண்டர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

நன்றி: X

தொடர்புடைய செய்தி