சென்னை பாரிமுனையில் இன்று (பிப்.10) திமுக - தவெக-வினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், தவெக-வினர் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தவெக நிர்வாகி நிர்மல்குமார் கூறுகையில், “அமைச்சர் சேகர் பாபு தூண்டுதல் பேரில், கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் திமுக ரவுடிகள் தாக்கியுள்ளனர். இதுவரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்” என்றார்.