சேலம் மாவட்டத்தில் நேற்று (பிப்.13) நடந்த தவெக கூட்டத்திற்கு பிறகு, தவெக தொண்டர் ஒருவர், விஜய்க்கு ஆதரவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு திமுக மாணவரணி துணை செயலாளர் தமிழ் கா.அமுதரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “போகிற போக்கில் கொலை மிரட்டல் விடுக்கும் தவெக நிர்வாகி மீது தமிழ்நாடு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு உயிர் பலி ஆகியுள்ளது, அதை normalaise செய்து பேசுகின்றனர். civic sense-ம் இல்லை, common sense-ம் இல்லை” என்றார்.