காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு இன்று (பிப்.11) நடைபெற இருக்கிறது. இதில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களை சேர்ந்த சுமார் 1.50 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.