திருச்சியில் திமுக மாநாடு: 10 லட்சம் பேர் பங்கேற்க அமைச்சர் அழைப்பு

38பார்த்தது
திருச்சியில் திமுக மாநாடு: 10 லட்சம் பேர் பங்கேற்க அமைச்சர் அழைப்பு
திருச்சியில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருவதாகவும், காவிரியாய் திரண்டு வந்து மாநாட்டை பெருமைப்படுத்துமாறும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடல் அலைகளை போல திமுகவினர் திருச்சியில் சங்கமிக்க வேண்டும் என அவர் இன்று (பிப்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.