தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ளது. பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி வைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் அறிவித்துள்ளதால், இனி திமுகவுடன் இணைய வாய்ப்பில்லை. முன்னதாக காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தெரிவித்திருந்தார்.