காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை தந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (பிப்.22) இரவு 8 மணிக்கு சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, திமுக - காங்., கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.