சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும்
காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு முன்னிலையில், தமாகா நகரத் தலைவர் வைத்தி, மாவட்ட பொறுப்பாளர் விஜயபாபு மற்றும் 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர். எடப்பாடி பகுதியில் நேற்று (நவ., 19) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தங்கபாலு, 'தவெக தலைவர்
விஜய் தொடக்கக் காலத்தில் காங்கிரஸில் இணையவே ஆர்வமுடன் இருந்தார்' என்று தெரிவித்தார்.
நன்றி: தந்தி