புதுச்சேரியில் திமுக - காங், கூட்டணிக்கு தலைமை யார் என்பதில் சர்ச்சை நீடித்து வருகிறது. இதுகுறித்து மாணிக்கம் தாகூர் கூறுகையில், “கூட்டணியில் 8 விழுக்காடு வாக்கு வைத்துள்ள திமுக தலைமை தாங்குமா?, 26 விழுக்காடு வைத்துள்ள காங்கிரஸ் தலைமை தாங்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வருத்தம் தெரிவித்துள்ளார்.