“அதிமுக வாக்குகளை நீக்க திமுக சதி” - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

84பார்த்தது
அதிமுக வாக்குகளை திட்டமிட்டு நீக்குவதற்கு திமுக சதி செய்வதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் இன்று (நவ.14) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுகவினருக்கு மட்டுமே எஸ்ஐஆர் படிவம் கொடுக்க வேண்டும், அதிமுகவினருக்கு படிவங்களை கொடுக்க கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், இரண்டு அமைச்சர்களின் கைத்தடியாக மாறி திமுகவுக்கு சேவை செய்கிறார்கள்” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி