திமுகவில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அக்கட்சியின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.2) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சரும்,
திமுக தலைவருமான
மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான மாற்றங்கள் குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.