புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில்
திமுக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக புதுச்சேரி மாநில
திமுக நிர்வாகிகளுடன்
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இத்தொகுதியில்
திமுக வேட்பாளராக மாநில அமைப்பாளர் சிவா, மருத்துவர் ரித்தீஷ் அல்லது தங்கவேலு ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் களம் இதன் மூலம் சூடுபிடித்துள்ளது.