சட்டப்பேரவைத் தேர்தலில் யாரை ஜெயிக்க விடக் கூடாது என்பதில் திமுக தலைமை இம்முறை உறுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாக்-அவுட் பட்டியலில் முதலிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இருப்பதாக கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வுக்காக 3 வகை சர்வேக்கள் நடத்தப்பட்டு, ஸ்டாலின் நேரடி பார்வையில் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாஜக முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களையே களமிறக்கும் திட்டம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.