காஞ்சிபுரம் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சி.ராதாகிருஷ்ணன் தவெகவில் இணைந்துள்ளார். சென்னையில் தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் இன்று (மே 30) இணைந்தார். அவருக்கு தவெக உறுப்பினர் அட்டை சேர்ந்த சில நிமிடங்களிலேயே வழங்கப்பட்டது. அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில், திமுகவில் இருந்தும் சிலர் இணையத் தொடங்கியுள்ளனர்.