தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, 2022ஆம் ஆண்டு திமுக அரசு பொங்கல் பணம் ரூ.1000 வழங்கவில்லை. 2023 மற்றும் 2024ஆகிய ஆண்டுகளில் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு 2025 பொங்கல் பணம் வழங்கவில்லை. 5 ஆண்டுகளில் ரூ.2000 வழங்கிய நிலையில், தற்போது ரூ.3000 வழங்குவதால் ஆண்டுக்கு ரூ.1000 என்ற கணக்கு சரியானதாக சிலர் கூறி வருகின்றனர்.