சென்னை: குற்றவாளிகளை திமுக அரசு குஷியாக்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று (நவ.8) கூறியதாவது, “மயிலாடுதுறையில் பள்ளிப் பேருந்தை போதை ஆசாமிகள் தாக்கியுள்ளனர். திமுக ஆட்சியில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுகிறது. பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் யார் பொறுப்பு?. பள்ளிப் பேருந்து கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவலநிலைக்கு என்ன பதில்?” என சாடியுள்ளார்.